ஹேப்பி பர்த்டே நண்பா! – கூகுள் புதிய வசதி

கூகுள் தளம் இதுவரை பயனாளர்களின் பிறந்த நாள் அன்று கூகுள் முகப்பு தோற்றத்தில் “பிறந்தநாள் வாழ்த்து” படத்தைக் (Doodle) காட்டி வந்தது. தற்போது நமது நண்பர்களின் பிறந்தநாள் குறித்து நமக்கு நினைவூட்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி உங்கள் கூகுள்+ சர்க்கிளில் உள்ள நண்பர்களின் பிறந்தநாள் அன்று நீங்கள் கூகுள் தளத்திற்கு சென்றால் அங்கே உங்கள்  நண்பர்களின் பிறந்தநாள் பற்றி நினைவு செய்தி காட்டும்.

UPDATED SCREENSHOT:

Default-ஆக உங்கள் பிறந்த நாள் அன்று உங்கள் சர்க்கிளில் உள்ள அனைவருக்கும் உங்கள் பிறந்தநாள் பற்றி அறிவித்துவிடும். இதனையும், உங்கள் பிறந்த நாளையும் மாற்ற (ஹிஹிஹிஹி) கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள்.

https://plus.google.com/up/birthday

அங்கே உங்கள் பிறந்த நாளையும், மாதத்தையும் சரியாகக் கொடுத்து, யாருக்கெல்லாம் உங்கள் பிறந்தநாள் பற்றி தெரியலாம் என்பதை தேர்வு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இதில் விருப்பமில்லை என்றால் Visible to பகுதியில் “Only me” என்பதை தேர்வு செய்யவும்.

கூகிளில் உங்கள் கொடுத்துள்ள பிறந்த வருடத்தை மாற்ற முடியாது. இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் இந்த வசதி வந்துவிடும்.

இந்த பிறந்தநாள் அறிவிப்பு வசதி ஏற்கனவே பேஸ்புக் தளத்தில்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்

13 thoughts on “ஹேப்பி பர்த்டே நண்பா! – கூகுள் புதிய வசதி”