கூகிளை அழிக்கும் Zergs, காப்பாற்ற தயாரா?

 Zerg என்பது StarCraft என்னும் ஆன்லைன் விளையாட்டில் வரும் வேற்றுகிரக எதிரி உயிரினமாகும்[பார்க்க: மேலுள்ள படம்]. அது O வடிவில் இருக்கும். தற்போது இரண்டு O-க்கள் கூகிளை அழித்துக் கொண்டிருக்கிறது. உங்களால் அவைகளை தடுத்து கூகிளை காப்பற்ற முடியும். நீங்கள் தயாரா?

முதல் பத்தியை படித்ததும் குழப்பமாக உள்ளதா? சரி நேரடியாக விசயத்திற்கு வருகிறேன். கூகிள் தேடலில் அவ்வப்போது சுவாரசியமான சில விளையாட்டுக்களை “Easter Eggs” என்ற பெயரில் அறிமுகப்படுத்தும். தற்போது Zerg Rush என்னும் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் தளத்தில் Zerg Rush என்று தேடி கொஞ்ச நேரம் காத்திருங்கள். இரண்டு நிறங்களில் O-க்கள் விழுந்துக் கொண்டே இருக்கும். அவைகள் தான் Zergs. அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தேடல் முடிவுகளை அழிக்கும். அதை நீங்கள் தடுக்க வேண்டும். அதன் மேல கிளிக் செய்துக் கொண்டிருந்தால் அழிந்துவிடும். இது உங்கள் வேகத்திற்கான சவாலாகும். விளையாடி முடித்தப்பின் நீங்கள் பெற்ற மதிப்பெண்களை கூகிள்+ தளத்தில் பகிரலாம் (ஃபயர்ஃபாக்ஸில் பகிர முடியவில்லை. க்ரோமில் தான் பகிர முடிகிறது). கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

விளையாடி முடித்ததும் எல்லா O-க்களும் ஒன்று சேர்ந்து GG என்ற வடிவில் நிற்கும். அதற்கு “Good Game” என்று அர்த்தம்.

உங்களுக்கு  இந்த விளையாட்டு பிடித்திருக்கிறதா?எத்தனை மதிப்பெண்கள் நீங்கள் பெற்றீர்கள்?

இதையும் படிங்க:  Harlem Shake - நடனமாடும் யூட்யூப்

9 thoughts on “கூகிளை அழிக்கும் Zergs, காப்பாற்ற தயாரா?”