யூட்யூபில் முகத்தை மறைக்கலாம்

நாம் வீடியோ ஏதாவது பார்க்க வேண்டுமானால் முதலில் செல்வது கூகுளின் யூட்யூப் தளத்திற்கு தான். இது வரை பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய யூட்யூப் தற்போது வீடியோவில் முகத்தை மறைக்கும் (Face Blurring) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் வீடியோவை யூட்யூபில் அப்லோட் செய்த பிறகு அதனை எடிட் செய்யும் வசதி இருக்கும் அல்லவா? அதில் Enhancement என்பதை கிளிக் செய்தால் பின்வருமாறு வரும்.

அதில் வீடியோவிற்கு கீழே Additional Features என்பதை கிளிக் செய்தால் Blur All Faces என்று காட்டும். அதில் Apply என்பதை க்ளிக் செய்தால் வீடியோவில் உள்ள முகங்கள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட வீடியோவின் Preview-ஐயும் பார்க்கலாம்.

பிறகு மேலே Save As என்பதை கிளிக் செய்தால், முகங்கள் மறைக்கப்பட்ட வீடியோ தனியாக உருவாக்கப்படும். Save என்பதை கிளிக் செய்தால் அதே வீடியோ மாற்றப்படும்.

மேலும் வீடியோவின் தரத்தை பொறுத்து, சில நேரங்களில் வேலை செய்யாமல் இருக்கலாம் என்றும் யூட்யூப் தெரிவித்துள்ளது.

இது பற்றிய அறிவிப்பு: YouTube Blog: Face blurring: when footage requires anonymity

இதையும் படிங்க:  Harlem Shake - நடனமாடும் யூட்யூப்

15 thoughts on “யூட்யூபில் முகத்தை மறைக்கலாம்”

  1. இதனால் தங்களுக்கு எந்த வகையில் பயன் கிடைக்கும் என்பதை நான் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன். அதில் தோன்றும் விளம்பரங்களால் வருமானம் வரும்படி வழியிருக்கின்றதா சகோ?

    நன்றி